கிளார்கிக் விமர்சனத்திற்கு வட்சன் பதில்!  

Thursday, October 20th, 2016

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஷேன் வற்சன், அணிக்கு புற்றுநோய்க் கட்டி போன்று காணப்பட்ட குழுவொன்றின் அங்கமாக இருந்தார் என முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் முன்வைத்த குற்றச்சாட்டை, ஷேன் வற்சன் மறுத்துள்ளார்.

மைக்கல் கிளார்க் வெளியிட்டுள்ள புதிய சுயசரிதைப் புத்தகம் தொடர்பாக, சனல் 9 தொலைக்காட்சிச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் கருத்துத் தெரிவித்த அவர், ஷேன் வொற்சனை ஒரு புற்றுநோய் என்று அழைத்தார் என வெளிவந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். ஆனால், சில வீரர்கள், புற்றுநோய்க் கட்டி போன்று காணப்படுவதாகவும், அதைச் சரியாகக் குணப்படுத்தாது விட்டால், அது புற்றுநோய் போன்றதாகிவிடும் என்றே தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்துள்ள ஷேன் வோற்சன், “என்னைப் பொறுத்தவரை அக்கருத்து, என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை வெளிப்படுத்துகிறது என்பதை விட, அவர் எவ்வாறானவர் என்பதையே வெளிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.

அத்தோடு, இரண்டு வீரர்களுமே ஒய்வுபெற்றுள்ள நிலையில், இவ்வாறான செய்திகள் வெளியாகின்றமை குறித்தும், தனது ஏமாற்றத்தை வொற்சன் வெளிப்படுத்தினார். “இறுதியில், நாம் அனைவரும் ஓய்வுபெற்று, அதில் திருப்தியுடன் இருக்கும் நிலையில், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறான விடயங்கள் வெளிவருகின்றமை, மிகவும் ஏமாற்றம் தருகிறது” என்றார்.

மைக்கல் கிளார்க்கின் காலத்தில் உபதலைவராக இருந்த ஷேன் வொற்சனுக்கும் மைக்கல் கிளார்க்குக்கும் இடையில் சுமுகமான உறவு காணப்பட்டிருக்கவில்லை என்பதோடு, 2013ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற தொடரில், பயிற்றுநர் மிக்கி ஆர்தராலும் தலைவர் மைக்கல் கிளார்க்காலும் வழங்கப்பட்ட வீட்டுப் பாடங்களைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில், ஒரு போட்டித்தடை விதிக்கப்பட்ட நால்வரில் வொற்சனும் ஒருவராவார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஷேன் வொற்சன், அணிக்கு புற்றுநோய்க் கட்டி போன்று காணப்பட்ட குழுவொன்றின் அங்கமாக இருந்தார் என, அவ்வணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் முன்வைத்த குற்றச்சாட்டை, ஷேன் வொற்சன் மறுத்துள்ளதோடு, அக்குற்றச்சாட்டுத் தொடர்பாக விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

மைக்கல் கிளார்க் வெளியிட்டுள்ள புதிய சுயசரிதைப் புத்தகம் தொடர்பாக, சனல் 9 தொலைக்காட்சிச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் கருத்துத் தெரிவித்த அவர், ஷேன் வொற்சனை ஒரு புற்றுநோய் என்று அழைத்தார் என வெளிவந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். ஆனால், சில வீரர்கள், புற்றுநோய்க் கட்டி போன்று காணப்படுவதாகவும், அதைச் சரியாகக் குணப்படுத்தாது விட்டால், அது புற்றுநோய் போன்றதாகிவிடும் என்றே தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்துள்ள ஷேன் வோற்சன், “என்னைப் பொறுத்தவரை அக்கருத்து, என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை வெளிப்படுத்துகிறது என்பதை விட, அவர் எவ்வாறானவர் என்பதையே வெளிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.

அத்தோடு, இரண்டு வீரர்களுமே ஒய்வுபெற்றுள்ள நிலையில், இவ்வாறான செய்திகள் வெளியாகின்றமை குறித்தும், தனது ஏமாற்றத்தை வொற்சன் வெளிப்படுத்தினார். “இறுதியில், நாம் அனைவரும் ஓய்வுபெற்று, அதில் திருப்தியுடன் இருக்கும் நிலையில், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறான விடயங்கள் வெளிவருகின்றமை, மிகவும் ஏமாற்றம் தருகிறது” என்றார்.

மைக்கல் கிளார்க்கின் காலத்தில் உபதலைவராக இருந்த ஷேன் வொற்சனுக்கும் மைக்கல் கிளார்க்குக்கும் இடையில் சுமுகமான உறவு காணப்பட்டிருக்கவில்லை என்பதோடு, 2013ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற தொடரில், பயிற்றுநர் மிக்கி ஆர்தராலும் தலைவர் மைக்கல் கிளார்க்காலும் வழங்கப்பட்ட வீட்டுப் பாடங்களைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில், ஒரு போட்டித்தடை விதிக்கப்பட்ட நால்வரில் வொற்சனும் ஒருவராவார்

1-71

Related posts: