கிறிஸ் கெயிலுக்கு எதிரான மேன்முறையீடு – ஆஸி பத்திரிகைகள் தோல்வி!

Wednesday, July 17th, 2019

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயிலுக்கு எதிரான மேன்முறையீட்டில், அவுஸ்திரேலியாவின் 3 பத்திரிகைகள் தோல்வி அடைந்துள்ளன.

2015ம் ஆண்டு சிட்னியில் அவர் தொடர்பாக வெளியாக்கப்பட்ட செய்தி குறித்து, கிறிஸ் கெயில் சிட்னி மோர்னிஹ் ஹெரால்ட், த ஏஜ் மற்றும் கென்பரா டைம்ஸ் ஆகிய 3 பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.

சிட்னியில் உள்ள மசாஜ் மையம் ஒன்றில் பெண் ஒருவரை தகாதவகையில் அணுகியதாக கெயில் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும் இந்த செய்தியில் உண்மையில்லை என்று ஏற்கனவே நீதிமன்றம் உறுதிப்படுத்தி, கெயிலுக்கு குறித்த பத்திரிகைகள் 2 லட்சத்து 10 ஆயிரம் டொலர்களை நட்டயீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக குறித்த பத்திரிகைகள் மூன்றும் மேன்முறையீடு செய்திருந்த போதும், அந்த முறைப்பாட்டை நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

Related posts: