கிரிசாந்தின் ஹற்றிக் சாதனையுடன் – ஜொலிஸ்ராரை வீழ்த்தியது யாழ். சென்றல் அணி!

Thursday, April 5th, 2018

விஜியரட்ணம் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத் தொடரின் 4 ஆவது போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் யாழ். சென்றல் அணி ஜொலிஸ்ரார் அணியை 6 இலக்குகளால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்ரார் அணி 17.3 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது.

உமாதரன் – 24, சஜீகன் – 15, கஜாநாத் – 31, சந்தோஸ் – 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் யாழ். சென்றல் அணியை சார்ந்த மதுசன் – 2, கிரிசாந் – 3 (ஹற்றிக் சாதனை), சுபாதீஸ் – 2, றஜீவ்குமார் – 3 இலக்குகளைக் கைப்பற்றினர்.

120 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய யாழ். சென்றல் அணி 17.5 ஓவர்களில் 4 இலக்குகளை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றனர். றஜீவ்குமார் – 16, மதூஸன் – 43, மில்லர் ஆட்டமிழக்காது 13, சலிஸ்ரன் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில் ஜொலிஸ்ரார் அணியை சார்ந்த வாமணன் – 1, உமாதரன் – 3 இலக்குகளைக் கைப்பற்றினர்.

இப் போட்டியில் வெற்றி பெற்ற யாழ். சென்றல் அணி எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் கே.சி.சி.சி அணியை எதிர் கொள்ள உள்ளது.

Related posts: