கிரிக்கெற் பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி !

Saturday, April 29th, 2017

இலங்கை பாடசாலை மட்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இந்த நிகழ்வினை இலங்கை கிரிக்கட் நிறுவகமும், பாடசாலை கிரிக்கட் சங்கமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன

முதலாவது கட்டம் எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி முதல் 4ம் திகதி வரை மாத்தறையில் இடம்பெறவுள்ளது.இரண்டாவது கட்டம் மே மாதம் 7ம் திகதி முதல் 9ம் திகதி வரை கண்டியில் நடைபெறவுள்ளது. மூன்றாவது கட்டம் அனுராதபுரத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: