கிரிக்கெற்றில் தொடரும் சோகம்: ஆஸியை பின்பற்றுகின்றது நியூசிலாந்து!
Sunday, December 4th, 2016அடிபட்ட வீரருக்கு பதிலாக, துடுப்பாட்ட விரரோ, பந்துவிச்சாளரோ, அல்லது விக்கெட் கீப்பரோ அந்த வீரருக்கு இணையாக ஒரு வீரரை மாற்றிக்கொள்ளலாம் என்ற (concussion substitutes) கன்கசென் சப் முறையை ஆஸி அணியை தொடர்ந்து நியூசிலாந்து அணியும் உள்ளூர் போட்டிகளில் அமுல்படுத்தவுள்ளது.
கடந்த 2014ல் அவுஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் போட்டியின் போது, தலையின் பின்பகுதியில் பவுண்சர் தாக்கியதால், அவுஸ்திரேலிய வீரர் ஹியுஸ் மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர் உயிரிழந்த பின் மேலும் இது போன்ற துயர சம்பவம் நடக்காமல் இருக்க, ஐ.சி.சி., மற்றும் எல்லா கிரிக்கெட் போர்டுகளும் தீவிரமாக பல நடவடிக்கைகளை எடுத்து கொண்டே உள்ளது.இதன் ஒருபகுதியாக, போட்டிகளின் போது, இது போன்ற மோசமான தாக்குதலுக்கு உள்ளாகும் வீரருக்கு பதிலாக, வேறு ஒரு சப்ஸ் டியூட் வீரரை மாற்றிக்கொள்ள அவுஸ்திரேலிய அணி முடிவு செய்தது.
தற்போது இதே பாணியை, நியூசிலாந்து அணியும், உள்ளூர் தொடர்களில் இதே முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.இந்த முறைப்படி, அடிபட்ட வீரருக்கு பதிலாக, பேட்ஸ்மேனோ, பவுலரோ, அல்லது விக்கெட் கீப்பரோ அந்த வீரருக்கு இணையாக ஒரு வீரரை மாற்றிக்கொள்ளலாம்.
Related posts:
|
|