கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டாயமாகிறது ஊக்கமருந்து பரிசோதனை!

Tuesday, October 31st, 2017

இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நியாயமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (NADA- National Anti-Doping Agency) செயல்பட்டு வருகிறது.

அனைத்து வகை போட்டிகளிலும் பரிசோதனை நடத்தி வரும் நாடாக இருக்கும் இந்தியா, கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் சோதனை நடத்தாமல் இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறுகின்ற கிரிக்கெட் போட்டி தொடரின் போது கலந்து கொள்ளும் வீரர்களுக்கு சோதனை நடத்தப்பட வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து இந்திய விளையாட்டுத்துறை அமைச்சக செயலாளர் ராகுல் பட்நாகர் கூறுகையில் ‘‘இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரின் போது வீரர்களிடம் NADAவின் ஊக்கமருந்து தடுப்பு அதிகாரிகள் சென்று மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். ஒருவேளை ‘NADA’ நடைமுறைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பாடு இருந்தால், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.

முதற் கட்டமாக போட்டி நடைபெறுகின்ற போது இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் மெதுவாக அதில் இருந்து முன்னேற்றம் காணப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

Related posts: