கிரிக்கெட் வீரருக்கு உடல் நலக் குறைவு – தனிமை படுத்தப்பட்டார்!

Saturday, March 14th, 2020

அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

இதனால் தனிமை படுத்ததுப்பட்டு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது. இதனால் அணியுடன் இணைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய லூக்கி பெர்குசன் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளதா? என்று பரிசோதனை செய்ய இருக்கிறார்கள்

Related posts: