கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பெயர்-எண் கூடிய ஜெர்ஸி டெஸ்டில் அறிமுகம்!

Wednesday, July 24th, 2019

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, வீரர்கள் தங்களின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியுடன் விளையாட உள்ளனர்.

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடர் கிரிக்கெட் உலகமே உற்று நோக்கும் தொடர்களில் ஒன்றாகும்.

டெஸ்ட் போட்டிகளில் அனைத்து அணி வீரர்களும், தங்கள் பெயர் மற்றும் எண் பொறிக்கப்படாத வெள்ளை சீருடை அணிந்து விளையாடுவர். ஆனால், கிரிக்கெட்டில் முதல் முறையாக பெயர் – எண் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியை இந்த தொடரில் வீரர்கள் அணிந்து விளையாட உள்ளனர்

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ‘டெஸ்ட் கிரிக்கெட் ஜெர்ஸியில் வீரர்களின் எண்களும், பெயரும் இடம்பெறவுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பெயருடன் கூடிய ஜெர்ஸியை அணிந்திருக்கும் புகைப்படமும் பதிவிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக டெஸ்டில் வீரர்கள் பெயர் மற்றும் எண் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடுவது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: