கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு!

Monday, October 10th, 2016

கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அரிய நிகழ்வாக நியூசிலாந்து அணி களமிறங்கும் போதே 5 ஓட்டங்கள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்சர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 557 ஓட்டங்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி (211) இரட்டை சதமும், ரஹானே (188) அபார சதமும் எடுத்தனர்.

இந்திய அணி ‘டிக்ளேர்’ செய்வதற்கு முன்னதாக இந்திய வீரர் ஜடேஜா, ஆடுகளத்தின் நடுவே ஓட்டங்கள் எடுக்க ஓடினார்.இதைபார்த்த நடுவர் ஆடுகளத்தை சேதப்படுத்த கூடாது என்று அவரை எச்சரித்தார்.

ஆனால் இதை காதில் வாங்கிக் கொள்ளாத ஜடேஜா ஆடுகளத்தின் மத்தியில் மீண்டும் ஓடினார்.இதனால் ஆடுகளத்தை சேதப்படுத்தியதாக நடுவர் நியூசிலாந்து அணிக்கு இலவசமாக 5 ஓட்டங்களை வழங்கினார்.

இதனால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடும் போது இலவசமாக கிடைத்த 5 ஓட்டங்களுடன் தொடங்கியது.

2வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்கள் பெற்றுள்ளது. குப்தில் (17), டாம் லாதம் (6) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Penaly-5-runs

Related posts: