கிரிக்கெட் வரலாற்றில் உலகம் திரும்பி பார்க்கும் பேசுபொருளாக மாறிய அஞ்சலோ மத்யூஸின் ஆட்டமிழப்பு – டைம் அவுட் செய்யப்பட்ட முதல் துடுப்பாட்ட வீரராகவும் பதிவானார் மத்தியூஸ்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் அஞ்சலோ மத்யூஸ் ‘Time Out’ (டைம் அவுட்) முறையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.
இது உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு இன்று பேசுபொருளாக மாறியுள்ளது.
இதனையடுத்து, குறித்த டைம்அவுட் பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையில் எஞ்சலோ மெத்யூஸ் தனது வீடியோ ஆதாரத்தை எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நேற்றைய போட்டியின் நிறைவில் ஏஞ்சலோ மெத்யூஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தலைகவசத்தை அணிந்து, துடுப்பெடுத்தாட தயாராகி ஐந்து விநாடிகள் எஞ்சியிருந்ததை வீடியோ காணொளி மூலம் உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், துடுப்பெடுத்தாடுவதற்கு முன்பாக தலைகவசம் அணிந்து பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, நான்காவது நடுவர் வழங்கிய தீர்ப்பு தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துடுப்பெடுத்தாடுவதற்கு ஐந்து விநாடிகள் எஞ்சியிருந்ததை உறுதிப்படுத்தும் வீடியோ ஆதாரத்தை இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் இதுபோன்ற ஆட்டமிழப்பு இடம்பெறுவது இதுவே முதல்முறை.
146 வருட வரலாற்றைக் கொண்ட சர்வதேச கிரிக்கெட்டில் டைம் அவுட் செய்யப்பட்ட முதல் துடுப்பாட்ட வீரராக ஏஞ்சலோ மெத்யூஸ் பதிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|