கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றி!

Monday, February 12th, 2018

சிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் சிம்பாப்வே அணி 154 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 333 ஓட்டங்களை பெற்றது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிரன்டன் டெயிலர் 125ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 30.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரம்பெற்று தோல்வியைத் தழுவியது.

Related posts: