கிரிக்கெட் தேர்தலை இரண்டு வாரங்கள் ஒத்திவைக்க ஐசிசி இணக்கம்!

Monday, January 21st, 2019

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கும் தீரர்மானத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணக்கம் தெரிவித்துள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

நேற்று(20) விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் ஐசிசி இனது தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிஷர்ட்சனுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி இடம்பெறவிருந்த கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: