கிரிக்கெட் சபைக்கு அதிகாரிகளைத் தெரிவு செய்வது தொடர்பில் சங்கக்கார – மகேலவின் யோசனைகள் ஏற்பு!

Friday, February 8th, 2019

இலங்கை கிரிக்கெட் சபைக்கு அதிகாரிகளைத் தெரிவு செய்வது குறைக்கப்படுவதற்காக முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்தன முன்வைத்த யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யாப்பினை மே மாதத்துக்கு முன்னர் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அது தொடர்பான சீர்திருத்தங்கள் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கை கிரிக்கெட் சபைக்கு அதிகாரிகளைத் தெரிவு செய்வதைக் குறைப்பதற்காக சங்கா – மஹேல முன்வைத்த யோசனையை இந்த வாரத்துக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கத் தான் தயாராகவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட்டை சீர்குலைக்கும் மாபியாவுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.