கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் இருந்து குக் விலகல்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து அலஸ்ட்டயர் குக் விலகும் காலம் வந்துள்ளதாக, முன்னாள் தலைவர் மைக்கல் வோகன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4:0 என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வி கண்டதை அடுத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அலஸ்டயர் குக்கிற்கு தற்போது 31 வயதாகிறது.
இந்த டெஸ்ட் தொடரின் தோல்வியை அடுத்து குக் தமது எதிர்காலம் குறித்து தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
அத்துடன் இறுதி 3 டெஸ்ட் போட்டிகளிலும் அலஸ்டயார் குக்கின் உடல்மொழி, விரைவில் அவர் விலகும் தீர்மானத்தில் உள்ளார் என்பதை உணர்த்துவதாகவும் வோகன் கூறியுள்ளார்.
Related posts:
தென்ஆபிரிக்க 20 ஓவர் அணிக்கு டுமினி தலைவர்!
வடமாகாண எறிபந்தாட்டத் தொடரில் நான்காவது முறையாக யூனியன் சம்பியனானது
இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனின் மண்டையோடு தொடர்பில் வெளியாகியுள்ள ...
|
|