கிரிக்கெட் அணிகளை கட்டுப்படுத்த ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!

Saturday, April 29th, 2017

இந்தியா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஐ.சி.சி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

துபாயில் ஐ.சி.சி குழுவினர் நடத்திய முக்கிய ஆலோசனை கூட்டத்திலி பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், நிதி கட்டமைப்பில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் இதன் மூலம் வருவாயானது மற்ற நாட்டு அணிகளும் சமமாக விநியோகிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இதனால் இந்தியா, அவுஸ்ரேலியா, இலங்கை வருவாய் குறையும். அதே போல பெரிதும் விமர்சிக்கபட்ட இந்தியா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்துக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்ட திட்டமும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இப்படி அதிரடி மாறுதல் நடப்பதால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அடுத்த எட்டு ஆண்டுகளில் 277 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்படும் என தெரிகிறது. இந்த செயல்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதே போல, பாகிஸ்தானில் வெளிநாட்டு அணிகள் விளையாட போகும் போது பாதுகாப்பு உறுதிசெய்யபட வேண்டும் என்பதில் ஐசிசி உறுதியாக உள்ளது. கடந்த 2009ல் இலங்கை அணி பாகிஸ்தான் சென்ற போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதும், அதன் பின்னர் ஜிம்பாப்வே தவிர வேறு நாடுகள் பாகிஸ்தானுக்கு விளையாட செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: