கிரிக்கட் விளையாட்டை கறைப்படுத்தியது அவுஸ்திரேலியா!
Tuesday, March 27th, 2018
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டிவ் ஸ்மித் மற்றும் உபதலைவர் டேவிட் வோனர் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
கேப் டவுனில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்று வரும் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
அதன்படி தென்னாபிரிக்க அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டியில் இவர்கள் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அவுஸ்ரேலியா கிரிக்கட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்டிவ் ஸ்மித்தை தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என அவுஸ்ரேலிய கிரிக்கட் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்ரேலிய வீரர் கேமரூன் பென்ங்ராஃப்ட் பந்தை சேதப்படுத்தும் விதம் கேப்டவுன் மைதான கமராவில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அணித்தலைவர் ஸ்டிவ் சுமித், அதனை தாம் அறிந்திருந்ததாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த குற்றத்திற்காக ஸ்டிவ் ஸ்மித்திற்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு டெஸ்ட் போட்டிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கேமரூன் பென்ங்ராஃப்ட்டுக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதம் அபராதமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தண்டப்புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|