கிரிக்கட் சபையின் விசேட அறிவித்தல்..!

எதிர்வரும் 14 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த கழகங்களுக்கு இடையிலான முதல்தர கிரிக்கட் சுற்றுப் போட்டி திகதி நிர்ணயமின்றி பிற்போடப்பட்டுள்ளது என இலங்கை கிரிக்கட் அறிவித்தல் விடுத்துள்ளது.
போட்டிக்கான வியூகங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பாக விசேட பொதுச் சபைக் கூட்டத்தை அழைத்து, உறுப்பினர்களின் விசேட அனுமதியை பெற்றுக்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|