கிரிக்கட் சபையின் தற்காலிக முகாமையாளராக சரித் சேனாநாயக்க!

Wednesday, July 25th, 2018

இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளர்.

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் நிறைவடையும் வரை அவர் இலங்கை அணியின் முகாமையாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளரான ஹசங்க குருசிங்க, கிரிக்கட் ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ளார். இதனால் அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் செப்டம்பர் 30ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.

Related posts: