கிரிக்கட்டின் தலைவர் ஏன் ICC கூட்டத்தை புறக்கணித்தது ஏன்?

Monday, November 6th, 2017

சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்தில் மிகப்பெரிய ஊழல்களும், ஆட்டநிர்ணய சதியும் இடம்பெற்றிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இதுதொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ICC) குழு ஒன்று விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் நியுசிலாந்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ICC) கூட்டத்தில், சிறிலங்கா கிரக்கட்டின் தலைவர் திலங்க சுமத்திபால கலந்து கொள்ளவில்லை.

அவருக்கு பதிலாக சிறிலங்கா கிரிக்கட்டின் பிரதம நிறைவேற்றாளர் அஷ்லி டி சில்வாவும், முன்னாள் பொருளாளர் நுஷ்கி முஹமட்டும் கலந்து கொண்டிருந்தனர்.

விசாரணைக்கு உள்ளாக்கப்படலாம் என்ற அச்சத்தினாலேயே அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: