கிராமத்துக்கு கிரிக்கட்” – திறமைகளை கொண்ட வீரர்களுக்கு இலங்கையின் தேசிய அணியில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் இலங்கை கிரிக்கட் நிறுவனம்!

Friday, September 16th, 2022

திறமைகளை கொண்ட வீரர்களுக்கு இலங்கையின் தேசிய அணியில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் செயல் திட்டம் ஒன்றினை இலங்கை கிரிக்கட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கை கிரிக்கட்டின் தேசிய வளர்ச்சிப் பயணத்திற்கான வேலைத்திட்டத்தின் ”கிராமத்துக்கு கிரிக்கட்” என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் முதல் கட்டம் பொலநறுவை மாவட்டத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை லங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

இயற்கையாகவே திறமையுடையவர்களை இனங்கண்டு அவர்களை தேசிய அணிக்குள் இணைத்துக்கொள்வதே இந்த செயல் திட்டத்தின் பிரதான நோக்கம் என இலங்கை லங்கா கிரிக்கட் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: