கிரஹாம் போர்ட் இருக்க கவலை எதற்கு – மத்யூஸ் !

Monday, December 12th, 2016

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடர் வருகிற 26ஆம் திகதி தொடங்குகிறது, இதற்காக இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளது.

இதுகுறித்து அஞ்சலா மத்யூஸ் கூறுகையில், அணியின் பயிற்சியாளரான கிரஹாம் போர்ட் உதவியுடன் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

கடந்த 1999 முதல் 2003ம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு பயிற்சியாளராக இருந்த காரணத்தினால் மைதானங்களின் நிலவரம் பற்றி நன்கு அறிந்திருப்பார். பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார், அவரது ஆட்ட நுணுக்கங்கள் நாங்கள் வெற்றி பெற உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Graham_Ford

Related posts: