கிண்ணம் வெல்வதற்கு மலிங்காவின் அந்த உரை தான் காரணம்!

Thursday, May 25th, 2017

பத்தாவது ஐபிஎல் தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மலிங்காவும் ஒரு காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதின.

முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்கள் எடுத்தது 1-ஓட்டம் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்தது.

இந்நிலையில், இந்த வெற்றி குறித்து சச்சின் கூறுகையில் ஆட்டத்தின் முதல் பாதி எங்களுக்கு சாதகமாக இல்லை. போட்டியின் இடைவெளியின் போது மலிங்கா அருமையான ஒரு உரையை வீரர்களிடம் நிகழ்த்தினார்.

அந்த உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. அவர் பேசிய பிறகு ஆட்டத்தை வெற்றி பெற முடியும் என்ற நம்பினோம், அதே போல் வெற்றி பெற்றோம் என்று மலிங்காவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Related posts: