கிண்ணத்தை வெல்லுமா யாழ். மத்தி!

Wednesday, March 8th, 2017

எதிர்வரும் 9ஆம்இ 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருக்கும் 111ஆவதுவடக்கின் பெரும் சமரில் தமது இந்த பருவகால போட்டிகளில் பெற்றுள்ள பெறும் அனுபவங்களுடன் கிண்ணத்தை வெல்லும் நோக்குடன் களமிறங்கவுள்ளது யாழ். மத்திய கல்லூரி அணி.

வடக்கின் பெரும் சமரில் 36ஆவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றுமா சென் ஜோன்ஸ்?

யாழ். மத்திய கல்லூரி அணிஇ இம்முறை 5ஆவது வருட வீரனாக வடக்கின் பெரும் போரில் களமிறங்கும் நேர்த்தியான முன்வரிசைத்துடுப்பாட்ட வீரரான பிரியலக்சன் தலைமையில் களமிறங்குகின்றது.

இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத் தொடரில்பிரிவு-3இல் விளையாடி வரும் யாழ். மத்திய கல்லூரிஅணியினர் மிகவும் சிறப்பாகப் பிரகாசித்து வருகின்றனர். அவர்கள் இதுவரை எந்தவிதமான தோல்விகளையும் சந்திக்காத அணியாகவே தொடரில் பயணித்து வருகின்றனர்.

அணியின் பெறுதிகளை பார்க்கும்பொழுதுஇ இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள இவ்வணிஇ 8 போட்டிகளில்வெற்றியைப் பொற்றுள்ளது. 2 போட்டிகளை சமநிலையில்நிறைவு செய்துள்ளது.

குறிப்பாக இபாகமுவ மத்திய கல்லூரிஇ அக்குறனை ஸாஹிரா கல்லூரிஇ யாழ். இந்துக் கல்லூரிஇ கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் பத்திரிசியார் கல்லூரி ஆகிய அணிகளுக்கெதிரான போட்டிகளில் மத்திய கல்லூரி அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

யாழ். மத்திய கல்லூரி அணிக் குழாமை நோக்குகையில் அனுபவ வீரர்கள் மற்றும் சிறப்புப் பெறுதிகளை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் புதுமுக வீரர்கள் என்ற உள்ளடக்கத்துடன் பலம்பொருந்திய குழாமைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.

கிரிக்கெட்டில் வடக்கு இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக வர வேண்டும் : எட்வார்ட் எடின்

வடமாகாண அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர் தசோபன்இ நேர்த்தியான துடுப்பாட்டக்காரர்களான ஜெரோசன்இ கோமேதகன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதுசன் ஆகியோர் எதிரணிக்கு சவால் விடும் வகையில் உள்ள அணியின் முக்கியபுள்ளிகளாவர்.

துடுப்பாட்டத்தில் பிரியலக்சன்இ கார்த்தீபன்இ ஜெரோசன் கோமேதகன் ஆகியோர் முன்வரிசை மற்றும் மத்திய வரிசையைப்பலப்படுத்துகின்ற அதேவேளைஇ தசோபன் மற்றும் கௌதமன் ஆகியோரும் அணிக்கு கைகொடுக்கக் கூடிய மேலதிக துடுப்பாட்ட வீரர்களாக உள்ளனர்.

பந்து வீச்சை நோக்குகையில் மதுசன்இ சஜிகன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் இணைந்து தசோபன்இ தர்சாந் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களும் எதிரணியைத் திகிலூட்டுவதில்  வல்லவர்களாக உள்ளனர்.

கடந்த 12 வருடங்களாக அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் சுரேஷ் மோஹன் அவர்களேஇ இம்முறையும்பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்றார். இம்முறை அணியில் களமிறங்கும் வீரர்கள் பலர் கல்லூரியின் பழைய மாணவரானமோஹனின் பயிற்றுவிப்பின் கீழ்இ 13 வயதுப் பிரிவிலிருந்தே பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இதனால் வீரர்கள் ஒவ்வொருவர்பற்றியும் அவர் கொண்டிருக்கும் தெளிவு  அணிக்கு மேலும் கைகொடுக்கும்.

கடந்த வருடம் வடக்கின் பெரும் போரில் களங்கண்ட அணியிலிருந்த வெறுமனே இரண்டு வீரர்கள் மட்டுமே இவ்வருட அணியிலிருந்துவெளியேறியிருப்பதால்இ மத்திய கல்லூரி அணி அனுப வரீதியாகப் பலமானதாகவுள்ளது.

அதேவேளைஇ அதிகளவான வீரர்கள் சகலதுறை வீரர்களாக இருக்கின்றமை அணிக்கு பெரும்பலமாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சிறந்த கிரிக்கெட் வீரனாவதற்கு பயிற்சியும் நல்லொழுக்கமுமே முக்கியம் : சண்முகலிங்கம்

இது தவிரஇ இதுவரை தாம் எந்தத் தோல்வியையும் சந்திக்கவில்லை என்பது மத்திய கல்லூரி வீரர்களுக்கு மனவலிமையைக் கொடுத்துபோட்டியின் போது சிறந்த உத்வேகம் அழிக்கும் என்பது மத்தியினருக்கு மேலும் சாதகமாய் அமையும்.

இவர்களுடைய ஒரே நோக்கமாக அமைவது  28ஆவது முறையாக வடக்கின் பெரும் சமரில் வெற்றிபெற்று சென் ஜோன்ஸ்கல்லூரியிடமிருந்து கிண்ணத்தை மீட்டெடுப்பதாகும்.

இலங்கையின் முதற்தர விளையாட்டு இனையதளமான வுhநீயியசந.உழஅ ஊடாக போட்டியின் நேரடி ஒளிபரப்பை மூன்று தினங்களிலும்கண்டுகளிக்கலாம் என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றோம்.

Related posts: