கிண்ணத்தை வென்றார் எலீனா ஸ்விடோலினா!

Wednesday, August 16th, 2017

கனடாவில் நடைபெற்று வந்த Rogers Cup எனப்படும் கனேடிய பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் கிண்ணத்தை, உக்ரைன் வீராங்கனை எலீனா ஸ்விடோலினா வெற்றி கொண்டுள்ளார்.

இறுதிப் போட்டியில் டென்மார்க் வீராங்களை கரோலின் வொஸ்னியாக்கியை வெற்றி கொண்ட இவர் முதன் முறையாக  Rogers கிண்ணத்தை முத்தமிட்டுள்ளார்.கனேடிய பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டி, கனடாவின் ONTARIO மாநிலத்தின் TORONTO நகரில் நடைபெற்றது. இந்த போட்டி இரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.

எனினும்,  உக்ரைன் வீராங்கனை எலீனா ஸ்விடோலினா இந்த போட்டியில் சவால்கள் எதனையும் எதிர்கொள்ளாது இலகுவாக வெற்றியீட்டியுள்ளார். இவர், 6-4, 6-0 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று கிண்ணம் வென்றுள்ளார்.

Related posts: