கிண்ணத்தை வென்றது வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம்

Tuesday, July 18th, 2017

யாழ். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் முன்னாள் வீரரும் பயிற்றுவிப்பாளருமான அமரர் அருளானந்தம் ஞாபகார்த்த கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இருநாட்கள் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தை பெனால்டி முறையில் வீழ்த்தி 4-3 என்ற கோல்கணக்கில் வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

Related posts: