கிண்டலாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்த குரோசியா வீரர்!
Friday, July 13th, 2018
எங்களை கொஞ்சமாவது மதித்திருக்க வேண்டும் என்று குரோசிய அணி வீரர் லுகா மோட்ரிச் கூறியுள்ளார்.
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் குரோசியா அணி வெற்றி பெற்று, முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
28-ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதால், இங்கிலாந்து அணி நிச்சயமாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று கூறப்பட்டது.
மேலும் சில உள்ளூர் ஊடகங்கள் குரோசியா அணியை களைப்படைந்த அணி, அது ஒரு வயதான அணி என்றெல்லாம் தரம் தாழ்த்தி பேசினர்.
இது குறித்து குரோசியா அணியின் நட்சத்திர வீரர் லுகா மோட்ரிச் ஐடிவிக் கூறுகையில், இங்கிலாந்து பத்திரிகையாளர்கள், முன்னணி கால்பந்து வீரர்கள் என தொலைக்காட்சியில் எங்களை குறைத்து மதிப்பிட்டனர். இது மிகப்பெரிய தவறு என்று இப்போது அவர்களுக்கு புரிந்திருக்கும்.
அவர்கள் பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் எங்களுக்கான ஊக்கமருந்தாக எடுத்துக் கொண்டோம்.
நாங்கள் அவர்கள் எழுதுவதையும் பேசியதையும் கவனித்துக் கொண்டிருந்தோம், அதன் பிறகு சரி இன்று யார் களைப்படைந்த அணி என்று காட்டுவோம் என்று உறுதிபூண்டோம்.
அவர்கள் விவேகாம இருக்க வேண்டும், எதிராளியை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
கூடுதல் நேரத்துக்கு முன்பே ஆட்டத்தை முடித்து அவர்களைக் காலி செய்திருக்க வேண்டும். எங்கள் கனவு நிறைவேறியது. குரேஷிய வரலாற்றில் இது பேசப்படும். நாங்கள் கர்வமாக உணர்கிறோம் என்று கூறியுள்ளார்
Related posts:
|
|