கிண்ணத்தைச் சுவீகரித்தது ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம்!

அமரர் சிவலிங்கம் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம்.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகமும் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. 5 செற்களைக் கொண்டதாக ஆட்டம் அமைந்தது. முதல் செற்றை 25:16 என்ற புள்ளிகளின் அடிப் படையில் மத்தி கைப்பற்ற அடுத்த இரு செற்களையும் 25:22இ 25:22 என்ற புள்ளிகளின் அடிப்படை யில் இந்து கைப்பற்றியது. நான்காவது செற்றை 25:20 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 2:2 என்று ஆட்டத்தை சம நிலையாக் கியது மத்தி. ஐந்தாவது செற்றில் வெற்றியாளரைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த செற் 15:11 என்ற புள்ளி களின் அடிப்படையில் இந்து இளைஞரின் வசமானதை அடுத்து 3:2 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது இந்து இளைஞர் அணி.
Related posts:
|
|