கால்ப்பந்து தரவரிசை – இலங்கை முன்னேற்றம்!

சர்வதேச கால்பந்து சம்மேளத்தினால் (பிபா) வெளியிடப்பட்டுள்ள புதிய கால்பந்து தரவரிசைப்படுத்தலில் இலங்கை ஒரு இடம் முன்னேறி 200 ஆவது இடத்தினை கைப்பற்றியுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட குறித்த தரவரிசையில் 211 நாடுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதில் ஆசிய வளையத்தில் உள்ள நாடுகளில் தரவரிசையின் கீழ் ஆகவும் குறைந்த நிலையில் பாகிஸ்தான் 202வது இடத்தினை கைப்பற்றியுள்ளது.
பிபா தரவரிசையின் முதலிடம் வழமைபோல் பெல்ஜியம் இற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த பிரான்ஸ் இனை பின்தள்ளி குறித்த இடத்திற்கு பிரேசில் முன்னேறியுள்ளதோடு, பிரான்ஸ் மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
Related posts:
இந்தியா தொடர்பான அவதூறு: வருத்தம் தெரிவித்த வீரர்!
உபாதையிலிருந்து மீண்டு பயிற்றுவிப்பாளரை விலக்கினார் டைகர் வூட்ஸ்!
ரி20 போட்டியில் இலங்கை அபார வெற்றி!
|
|