கால்பந்து போட்டியில் சாதித்துக் காட்டிய யாழ்ப்பாண மாணவிகள் !

Tuesday, August 8th, 2017

இலங்கை பாட­சா­லை­கள் கால்­பந்­தாட்­டச் சங்­கம் நடத்­திய தேசி­ய­ மட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 16 வய­துப் பெண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரிக்கு மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

திரு­கோ­ண­மலை கிண்­ணி­யா­வில் கடந்த சனிக்கிழமை பிற்­ப­கல் நடை­பெற்ற மூன்­றாம் இடத்­துக்­கான ஆட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து கொழும்பு விதான மகா­தேவி வித்­தி­யா­லய அணி மோதி­யது. முதல் பாதி­யாட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி வீராங்­கனை திலக்­சனா 5ஆவது நிமி­டத்­தில் ஒரு கோலைப் பதிவு செய்ய 1:0 என்ற கோல் கணக்­கில் அந்த அணி முன்­னிலை வகித்­தது.

இரண்­டாம் பாதி­யின் 12ஆவது நிமி­டத்­தில் சர்­மிகா ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி 2:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று வெண்­க­லப் பதக்­கத்­தை சுவீ­க­ரித்­தது.

Related posts: