கால்பந்து தொடர்: முதன்முறையாக பெண் நடுவர் நியமனம்!

Friday, August 18th, 2017

ஐரோப்பிய கால்பந்து தொடரின் முதல் பெண் நடுவராக ஜேர்மனியில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் 39 வயதாகும் பிபியானா ஸ்டைன்ஹாஸ் பணியாற்ற உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு போட்டிகளில் கால்பந்து நடுவராக கலக்கி வரும் பிபியானா, முதன் முறையாக ஐரோப்பிய கால்பந்து தொடர்களில் ஒன்றான Bundesliga தொடரின் பெண் நடுவராக பணியாற்ற உள்ளார்.

இதுகுறித்து பிபியானா கூறுகையில், எனது கனவு நிறைவேறிவிட்டது, என் முன்னால் உள்ள சவால்களை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.மக்களும், ஊடகங்களும் என்னை உற்றுநோக்குவதால் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவேன் என தெரிவித்துள்ளார்.இவருக்கும் உலகின் முன்னணி வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.