கால்பந்து உலகை புரட்டிப் போட்ட சர்வதேச தலைவர் லெனார்ட் ஜோஹன்சன் மறைவு!

Thursday, June 6th, 2019

ஸ்வீடனை சேர்ந்த ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் லெனார்ட் ஜோஹன்சன் தனது 89 அவது வயதில் காலமானார்.

ஜோஹன்சன் மறைவு செய்தியை ஸ்வீடன் கால்பந்து சங்கம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜோஹன்சன் உயிரிழந்ததாக ஸ்வீடன் கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

1992-ல் சாம்பியன்ஸ் லீக் அறிமுகம் செய்ததின் மூலம் ஜோஹன்சன் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக 1990 முதல் 2007 வரை செயல்பட்ட ஜோஹன்சன், 1992 ஆம் ஆண்டு தனது தாயகத்திற்கு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை கொண்டு வர உதவினார்.

ஜோஹன்சன், மிகப்பெரிய சர்வதேச கால்பந்து தலைவர், இவருக்கு நிகராக உலக கால்பந்தில் ஸ்வீடன் நட்டவர் யாரும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை.

UEFA தலைவர் மற்றும் FIFA துணைத் தலைவராக அவர் சிறந்த மரியாதையுடன் இருந்தார், அவருடைய தலைமை உலகம் முழுவதிலும் புகழ்பெற்றது என ஸ்வீடன் கால்பந்து சங்கத்தலைவர் கார்ல்-எரிக் நில்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜோஹன்சன் மறைவுக்கு கால்பந்து வீரர்கள், ரசிகர்கள், சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts: