கால்பந்து உலகின் ஜம்பவான் ரொனால்டோவுக்கு 2 ஆண்டுகள் சிறை!
Saturday, June 16th, 2018கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தொடரப்பட்ட வரி ஏய்ப்பு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரொனால்ட்டோ கால்பந்து உலகின் ஹீரோ என்று அழைக்கப்படுபவர்.
போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து அணிக்காகவும் ரியல் மேட்ரிட் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ கால்பந்து வீரர்களில் அதிக சம்பளம் பெறும் வீரர். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ அந்த நாட்டு அரசுக்கு சரியாக வருமான வரி செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அவர் மீது வரிஏய்ப்பு வழக்கு தொடர்ந்து ஸ்பெயின் அரசு விசாரணை நடத்தியது.
இதில் ரொனால்டோ வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை வருமானவரித்துறை பரிந்துரை செய்தது.
இதன்படி 2 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.148 கோடி அபராதம் செலுத்தவும் ரொனால்டோ சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்பெயின் நாட்டு சட்டப்படி வரி ஏய்ப்பில் முதல்முறையாக 2 ஆண்டு தண்டனை பெறுபவர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|