கால்பந்துத் தொடரில் மகாஜன சம்பியன்!

வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத்தில் 20 வயது பெண்கள் பிரிவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்;தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி மோதியது.
முதலாவது பாதியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் முதலாவது கோலைப் பதிவு செய்தார் தர்மிகா, மேலதிக கோல்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல் பாதி.
இரண்டாவது பாதியில் தர்மிகா மற்றொரு கோலைப் பதிவு செய்தார். சானு அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பதிவுசெய்ய முடிவில் 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது மகாஜனக் கல்லூரி அணி.
Related posts:
வீரர்களின் உபாதைகளைத் தடுக்க மெதுவான பந்துகள் வேண்டும் - ரபேல் நடால்!
டெஸ்ட் தொடரில் இருந்து மொயீன் அலி நீக்கம்!
மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி!
|
|