கால்பந்திலும் காலடி பதிக்கும் ஓட்டபந்தய அசுரன் உசேன் போல்ட்!

Tuesday, November 15th, 2016

தடகளத்தில் உலகை கலக்கிக் கொண்டிருக்கும் சாதனை மனிதன் உசேன் போல்ட் தற்போது தனது 2வது இன்னிங்சை தொடங்கி இருக்கிறார். 10 நிமிடங்கள் மட்டுமே ஓடி உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இந்த ஓட்டபந்தய அசுரன், இனி 90 நிமிடங்கள் கால்பந்து அரங்கில் நிற்காமல் ஓடப் போகிறார்.

2017ம் ஆண்டோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டாலும், உசேன் போல்ட் தன் கால்களுக்கு எளிதில் ஓய்வு கொடுக்க விரும்பவில்லை.ஓட்டப்பந்தயம் மட்டுமல்லாது கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளிலும் போல்ட் திறமையானவர். அதிலும் கால்பந்தின் மீது அதீத காதல் கொண்டவர்.

அவர் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடட் அணியின் தீவிர ரசிகர். 2011ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் அணி விளையாடுவதை கூட பார்க்கச் சென்றிருந்தார்.அப்போது தான் தடகளப் போட்டிகளில் தான் ஓய்வு பெற்ற பிறகு, மான்செஸ்டர் யுனைடட் அணிக்காக விளையாட விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போல்ட் ஜெர்மனியின் முன்னணி அணியான பொருசியா டார்ட்மென்ட் அணியினரோடு சேர்ந்து கால்பந்து பயிற்சியில் விரைவில் களமிறங்கவுள்ளார். அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் தாமஸ் டகெலின் தலைமையின் கீழ் கோட்சே, அபாமயாங் உள்ளிட்ட பிரபல வீரர்களோடு அவர் பயிற்சி மேற்கொள்ளப் போகிறார்.

bolt

Related posts: