கால்பந்தாட்டத் தொடர்: சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!
Thursday, April 12th, 2018
யாழ்ப்பாண கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் 20 வயது ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதியாட்டத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது. ஆட்டத்தின் 16 ஆவது நிமிடத்தில் சென். பற்றிக்ஸின் முதலாவது கோலைப் பதிவுசெய்தார் கிறிஸ்தீபன். 21 ஆவது நிமிடத்தில் யாழ்ப்பாணம் மத்தியின் கோலைப் பதிவுசெய்தார் பெலின். நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஓர் கோலைப் பெற்ற நிலையில் முதல் பாதி முடிவுக்கு வந்தது.
இரண்டாவது பாதியின் 12 ஆவது நிமிடத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியின் இரண்டாவது கோலைப் பதிவு செய்தார் அபிசன். 24 ஆவது நிமிடத்தில் சென். பற்றிக்ஸின் மூன்றாவது கோலைப் பதிவுசெய்தார் கெயின்ஸ். முடிவில் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி.
Related posts:
|
|