காலில் உபாதை – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க விலகல்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் எதிர்வரும் போட்டிகளிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க விலகியுள்ளார்.
இந்தநிலையில், இலங்கையின் உலகக் கிண்ண அணியில் தசுன் ஷானக்கவுக்கு பதிலாக சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
தசுன் ஷானக்கவுக்கு, உபாதையிலிருந்து மீளுவதற்கு சுமார் மூன்று வாரங்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், இலங்கை குழாமுடன் மேலதிக வீரராக இந்தியாவுக்கு பயணமான சாமிக்க கருணாரத்ன நாளை இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெறுவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை அணியின் உப தலைவராக கடந்த சில மாதங்களாக பதவி வகித்த குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்கவுக்குப் பதிலாக அணிக்கு தலைமை தாங்குவார் என இலங்கை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|