காற்பந்து தரவரிசையில் இலங்கை வீழ்ச்சி!

olbhutan-chencho_wide-b29da6ac2657960fa52136de03f70f967d71eb1d-720x480164239991_3914707_08012016_aff_cmy_0 Wednesday, December 6th, 2017

இலங்கை காற்பந்து அணியானது ஃபிஃபா சர்வதேச காற்பந்து தரவரிசை பட்டியலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

தற்போது இலங்கை அணி 200வது இடத்தில் உள்ளது. இதுவே இலங்கை காற்பந்து அணி அடைந்த மிகப்பெரிய வீழ்ச்சியாகும் என்று கூறப்படுகிறது.

இலங்கை அணியானது எந்த சர்வதேச காற்பந்து போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.இதனால் இயல்பாகவே தரவரிசையில் பின்னிலை அடைந்திருப்பதாக இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார்.