காற்பந்தாட்ட வீரர்களுக்கு கட்டாரில் பயிற்சி!

Monday, December 11th, 2017

இலங்கை கட்டார் காற்பந்தாட்ட சங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகிறது.

ஐந்தாண்டு கால திட்டத்தின் கீழ் காற்பந்தாட்ட விளையாட்டின் அபிவிருத்திக்கு வித்திடுவது உடன்படிக்கையின் நோக்கமாகும் என இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்தார்.  இதன் கீழ் இலங்கை காற்பந்தாட்ட வீரர்கள் கட்டாரில் பயிற்சிகளை பெறும் வாய்ப்பை பெறுவார்கள் என அவர் கூறினார். கட்டார், காற்பந்தாட்ட விளையாட்டில் பெரும் முன்னேற்றத்தை சந்தித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரை கட்டார் ஏற்று நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: