கார்ப்பந்தயத் தொடரிலிருந்து ஹமில்டன் விலகல்!

Tuesday, October 4th, 2016

காரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மலேசியக் கார்ப்பந்தயத் தொடரிலிருந்து பாதியில் விலகினார் கார்ப்பந்தய உலகின் ஜாம்பவானான பிரித்தானிய வீரர் லூயில் ஹமில்டன்.

வழக்கம்போல நடப்பு வருட உலக கார்ப்பந்தயத் தொடர் 21 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 17ஆவது சுற்றான மலேசியப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. தகுதிச்சுற்றில் வெற்றிபெற்றதால் முதல் நிலை வீரராக போட்டியை ஆரம்பித்தார் ஹமில்டன்.

311கிலோ மீற்றர் தூரமுடைய பந்தயத்தில் 210 கிலோ மீற்றர்களின் முடிவில் ஹமில்டனே முதலிடத்தில் நீடித்து வந்தார். ஆனால் அவரது காரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக போட்டியிலிருந்து விலகினார். ஆஸ்திரேலிய வீரரான டானியல் ரிச்சார்டோ சாம்பியனானார். நெதர்லாந்து வீரரான மக்ஸ் வெர்ஸ்ட்டப்பன் இரண்டாமிடத்தையும், ஜேர்மனிய வீரரான நிக்கோ ரஸ்பேர்க் மூன்றாமிடத்தையும் பெற்றனர். முடிவடைந்த 16 சுற்றுக்களின் ஒட்டு மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் ரஸ்பேர்க் முதலிடத்திலும், ஹமில்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

wwwwww10-620x350

Related posts: