காபூலில் பயங்கர தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அரச படைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே இன்று பரஸ்பரம் துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வெடிமருந்து நிரப்பப்பட்ட பாரஊர்தி ஒன்றை பாதுகாப்பு அமைச்சின் தொழில்நுட்ப பிரிவை குறி வைத்து வெடிக்க வைத்த தற்கொலைதாரி பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து துப்பாக்கிதாரிகள் சிலர் பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத்திற்குள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நிலையில் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதல்கள் காரணமாக குறைந்தது 35 சிறார்கள் உட்பட நூறுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக உட்துறை அமைச்சின் பேச்சாளர் நஸ்ரத் ரஹூமி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களாக தாலிபான்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில், ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க விசேட சமாதான தூதுவர் சல்பே கஹலி, கட்டாரில் தாலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். இந்த நிலையிலேயே இன்றைய தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|