காட்டுத்தீ நிராவண நிதிக்கான கிரிக்கட் போட்டி பிற்போடப்பட்டது!

Friday, February 7th, 2020

வானிலை முன்னறிவித்தல் காரணமாக எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவிருந்த காட்டுத்தீ நிராவண நிதிக்கான கிரிக்கட் போட்டி, பிற்போடப்பட்டுள்ளது.இந்தப் போட்டியை எதிர்வரும் சனிக்கிழமை சிட்னியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், வானிலை முன்னறிவிப்பு காரணமாக எதிர்வரும் 9 ஆம் திகதி மெல்பெனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான ரிக்கி பொன்ரிங் மற்றும் ஷேன் வோர்ன் ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகள் பங்கேற்கவுள்ள இந்தப் போட்டி 10 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கொட்னி வோல்ஸ் ஆகியோர், அணிகளின் பயிற்றுவிப்பாளர்களாக செயற்படவுள்ளனார்.

இந்தப் போட்டிக்கான அணிகளில், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ப்றெய்ன் லாரா, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுவ்ராஜ் சிங் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வஸீம் அகரம் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

எவ்வாறிப்பினும் போட்டி பிற்போடப்பட்டதனால் இந்தப் போட்டியில் ஷேன் வோர்ன் மற்றும் மைக்கல் க்ளாக் முதலான வீரர்கள் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: