கவலையில் லசித் மாலிங்க!

Wednesday, January 2nd, 2019

2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெறாமை குறித்து தான் கவலையடைவதாக இலங்கை அணியின் இருபதுக்கு இருபது அணித் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கட் இணையத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

” இதனை சிறப்பான சந்தர்ப்பமாக நாங்கள் கருதுகிறோம். நாம் முதல் 9 அணிகளுக்குள் வருவோம் என அனைவரும் நினைத்திருந்தனர். எனினும் எமக்கு மேலுமொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த போட்டிக்கு முகங்கொடுக்க எமது அணி தயார் நிலையில் உள்ளது.

அதேபோல் , தரப்படுத்தலில் முதல் வரிசையில் உள்ள வீரர்கள் சிலர் எம்மிடம் உள்ளனர். நாங்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக உள்ளோம்”. என லசித் மாலிங்க தெரிவித்திருந்தார்.

2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடருக்கான குழு நிலை போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: