கவர்ச்சியான உடை அணிந்தால் 1000 டொலர்கள் அபராதம்: கோல்ஃப் சங்கம் !

Wednesday, July 19th, 2017

உலக பணக்கார விளையாட்டுகளில் ஒன்றாக திகழும் கோல்ஃப் போட்டியில் பெண்கள் கவர்ச்சியான உடை அணிய பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம் தடைவிதித்துள்ளது. இதை மீறினால் 1000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் விளையாடும்போதும் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போதும் முகம் சுழிக்க வைக்கும் வகையில் ஆடை அணிந்து வருவதனால் இதனை முற்றாக தடை செய்யும் வகையில் கோல்ஃப் சங்கம் இந்த நடைமுறையை அமுல் படுத்தியுள்ளது. கடந்த 2ஆம் திகதி இந்த அறிவிப்பு வெளியாகிய போதும் இன்றிலிருந்து இந்த ஆடைக் கட்டுப்பாட ஆடைக் கட்டுப்பாட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

எந்தெந்த உடைகள் அணியலாம் எந்தெந்த உடைகள் அணியக்கூடாது என்பதை என்பது குறித்து பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம்இ அனைவருக்கும் மின்னஞல் ஒன்றை அனுப்பியுள்ளது.

Related posts: