கலக்கிய குஷால் மெண்டிஸ்: புகழ்ந்து தள்ளும் அரவிந்த !

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் குஷால் மெண்டிஸ் ஜெயவர்த்தனேவை போல் துடிப்பாக செயல்பட்டதாக முன்னாள் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா பாராட்டியுள்ளார்.
பல்லேகலவில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் குஷால் மெண்டிஸ் 176 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதனால் இலங்கை அணி 2வது இன்னிங்சில் வலுவான நிலையை பெற்றது.இந்நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட குஷால் மெண்டிஸூக்கு முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், குஷால் மெண்டிஸ் தனது அமைதியான ஆக்ரோஷ ஆட்டத்தால், தான் யார் என்பதை தெளிவாக காட்டிவிட்டார். உயர்ந்த நிலைக்கு செல்லும் அனைத்து திறமையும் அவரிடம் உள்ளது.ஜெயவர்த்தனேவை போல் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. இதை அவர் தொடர்ந்தால் ஜெயவர்த்தனேவை போல் நல்ல ஒரு நிலையை எட்ட முடியும்.
குஷால் “அண்டர்-19” அணியில் விளையாடும் போது அவரை நான் பார்த்திருக்கிறேன். சாதிக்க கூடிய அனைத்து திறமையும் அவரிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
Related posts:
|
|