கரீபியன்களின் தொடர் தோல்விகளால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் – மிஸ்பா உல் ஹக்!

Thursday, October 27th, 2016

மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடர் தோல்விகளால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் கவலை வெளியிட்டுள்ளார்.

ரி- ருவென்ரி தொடர், ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் என மூன்று தொடரிலும் தோல்வி கண்ட மேற்கிந்திய தீவுகள் அணி, தற்போது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இறுதியாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 133 ஒட்டங்கள் வித்தியாசத்தில், மேற்கிந்திய தீவுகள் அணி, தோல்வியை தழுவியது. இந்நிலையில், இவ்வெற்றியின் பின் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் கருத்து தெரிவிக்கையில்,

‘ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகத்தில் கொடிகட்டிப் பறந்த மேற்கிந்திய தீவுகள் அணி, தற்போது தோல்விமேல் தோல்விகளை சந்தித்து வருவது சிறிய ஏமாற்றத்தை அளிக்கிறது. தற்போதைய மேற்கிந்திய தீவுகள் அணி அதிகமாக இளைஞர்களைக் கொண்ட அணி. அவர்கள் சிறந்த அணியாக மாறுவார்கள். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அவர்களிடம் அனுபவ குறைபாடு உள்ளது.

முன்னாள் அணிதலைவர் கிளைவ் லாய்ட் அணிதலைவராக இருந்த காலத்தில் இருந்த வலுவான மேற்கிந்திய தீவுகள் அணியைபோல் தற்போதைய அணியை பார்க்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புவார்கள். தற்போது அவர்களுடைய அனைத்து ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றம்” என கூறினார்.

கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அந்த அணி 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 19 தோல்விகளை சந்தித்துள்ளது, நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள அந்த அணி 6 போட்டிகளை சமநிலை செய்துள்ளது. முன்னாள் அணிதலைவர் கிளைவ் லொய்ட் தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி 1980 ஜனவரி மாதத்தில் இருந்து 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 27 போட்டிகளில் தோல்விகளை சந்திக்காத அணியாக திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

colmisba-main-720x480125719991_4892552_26102016_aff_cmy

Related posts: