கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் சங்கக்காரவின் அணி வெற்றி!

Tuesday, August 9th, 2016

 

கரிபியன் பிரீமியர் லீக் 2016 தொடரில் இன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் குமார் சங்கக்காரவின்  தலாவாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

கயானா வோரியர்ஸ் அணியுடனான போட்டியில் 9 விக்கெட்டுக்களினால் தலாவாஸ் அணி வெற்றி பெற்றதுடன் அந்த அணியின் வெற்றிக்கான ஓட்டத்தை குமார் சங்கக்காரவே பெற்றுக்கொடுத்திருந்தார். இனிங்ஸின் 12.5 ஆவது ஓவரில் நான்கு ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த போட்டித் தொடர் முழுவதும் துடுப்பாட்டம் மற்றும் விக்கெட் காப்பில் குமார் சங்கக்கார சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: