கரப்பந்தாட்ட தொடர்:  வயாவிளான் மத்தி சம்பியன்!

images Tuesday, May 15th, 2018

வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டத்தில் 20 வயது பெண்கள் பிரிவில் வயாவிளான் மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.

கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதியாட்டத்தில் வயாவிளான் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி மோதியது. ஆட்டத்தின் முதலாவது செற்றை 25:22 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியது வயாவிளான் மத்திய கல்லூரி அணி. அந்த அணி இரண்டாவது செற்றையும் 25:18 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 2:0 என்ற நேர்செற் கணக்கில் கிண்ணம் வென்றது.

மூன்றாமிடத்துக்கான ஆட்டத்தில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அணியை எதிர்த்து பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி மோதியது. முதலாவது செற்றில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி அணி 25:19 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது. இரண்டாவது செற்றில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி 25:22 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது. மூன்றாவது செற்றில் மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்க வேண்டிய நிலை. அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அணி 25:22 என்ற புள்ளிகளின்  அடிப்படையில் அந்த செற்றைக் கைப்பற்றி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தைத் தனதாக்கியது. சிறந்த கரப்பந்தாட்ட வீராங்கனையாக வசாவிளான் மத்திய கல்லூரியை பிரதிநித்துவம் செய்த கோபிகா தெரிவு செய்யப்பட்டார்.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!