கனடா தேசிய கிரிக்கெட் அணியில் தமிழனுக்கு இடம்!

Sunday, December 10th, 2017

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெறவிருக்கும் U19 கிரிக்கெட் போட்டியில் 16 நாடுகள் பங்கு கொள்கின்றன. இப் போட்டியில் கனடா தேசிய கிரிக்கெட் அணியில் ஈழத் தமிழரான நரேஸ் விளையாடுகிறார்.

காவியன் தனது 6 ஆவது வயது முதல் தனது கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார். அவரின் கடும் பயிற்சியும் விடா முயற்சியும் கனடாவின் தேசிய அணிக்காக விளையாடுவதற்கு வழி வகுத்துள்ளன. சிறந்த துடுப்பாட்ட வீரரும் பந்து வீச்சாளருமாக கனடாவின் நட்சத்திர நாயகனாக விளங்குகிறார்.

அண்மையில் மேற்கிந்தியத் தீவில் நடந்த போட்டியில் சிறந்த முறையில் விளையாடி வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். அண்மையில் இலங்கை வந்து சிறந்த பயிற்றுவிப்பாளர்களிடம் பயிற்சி பெற்று சென்றுள்ளார். ஈழத்தின் தென்மராட்சியைப் பூர்வீகமாகக் கொண்ட நரேஸ் கனடா தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் முதல் தமிழர் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

Related posts: