கடைசி நிமிடத்தில் ஜப்பானின் கனவை உடைத்த பெல்ஜியம்!

Tuesday, July 3rd, 2018

உலகக்கிண்ண போட்டியில் ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 3.-2 என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் நாக் அவுட் சுற்றின் நேற்றைய இரண்டாவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியுடன் ஜப்பான் அணிகள் மோதியது.

இதில் ஆரம்பத்தில் இருந்தே ஜப்பான் அணி வீரர்கள் பெல்ஜிய அணிக்கு கடும் சவாலாக இருந்தனர். இதனால் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்காத காரணத்தினால் முதல் பாதி 0-0 என்று சம நிலையானது.

இதையடுத்து இரண்டாவது பாதியில் ஜப்பான வீரர்கள் அதிரடியாக விளையாடினர். ஜப்பான் அணி வீரர்களா இப்படி என்று கேட்கும் அளவிற்கு அவர்களின் ஆட்டம் இருந்தது.

இதன் பயனாக ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜெங்கி ஹராகுசி ஒரு கோல் அடிக்க, அடுத்த நான்கு நிமிடங்களில் அதாவது 52-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் மற்றொரு வீரரான டகாஷி இனுல் ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் பெல்ஜியம் அணி வீரர்கள் திணறி வந்த திணறி வந்த நிலையில் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி வீரர் ஜேன் வெர்டோகன் அற்புதமாக கோல் அடிக்க, அதைத் தொடர்ந்து 74-வது நிமிடத்தில் மற்றொரு பெல்ஜியம் வீரரான பெலானி ஒரு கோல் அடித்ததால் இரு அணிகளும் 2-2 என்று சமநிலை வகித்தன.

இரண்டாவது பாதி நேரம் முடிந்த பின்னும் இரு அணிகளும் சமநிலை வகித்ததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் நாசர் சடி 94வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இறுதியில், ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது.

ஜப்பான் அணி இந்த போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியிருந்தாலும், அந்தணியின் வீரர்களின் ஆட்டத்தை கண்ட பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related posts: