கடைசி டெஸ்டிலும் இலங்கை திணறல்!

Saturday, January 14th, 2017

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி திணறி வருகிறது. இலங்கை- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்கியது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 426 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஹசிம் அம்லா 134 ஓட்டங்களும், டுமினி 155 ஓட்டங்களும் எடுத்தனர்.இலங்கை அணி சார்பில், நுவன் பிரதீப் 4 விக்கெட்டும், லஹிரு குமார 4 விக்கெட்டும், மேத்யூஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி தொடக்க முதலே திணற ஆரம்பித்தது.தொடக்க வீரர்களான கருணாரத்னே (0), குஷால் சில்வா (13) ஆகியோர்கள் நிலைக்கவில்லை. அடுத்து வந்த தனன்ஜெய டி சில்வா (10) சொற்ப ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

நிதானமாக விளையாடி வந்த குஷால் மெண்டிஸ் 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 2வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 4 விக்கெட்டுக்கு 80 ஓட்டங்கள் எடுத்து 346 ஓட்டங்கள் பின்தங்கி உள்ளது.தென் ஆப்பிரிக்கா அணியில் பில்லாந்தர், ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: